• Apr 21 2026

ஈரான் போரில் 140 அமெரிக்க வீரர்கள் காயம்: 7 பேர் உயிரிழப்பு

Chithra / Mar 11th 2026, 9:29 am
image

 

ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை சுமார் 140 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், 7 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவரை 7 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.


சுமார் 140 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 8 பேர் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


காயமடைந்தவர்களில் 108 வீரர்கள் ஏற்கனவே சிகிச்சைக்குப் பின் மீண்டும் தங்களது பணிகளுக்குத் திரும்பியுள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் (Sean Parnell) தெரிவித்துள்ளார்.

 

ஈரான் போரில் 140 அமெரிக்க வீரர்கள் காயம்: 7 பேர் உயிரிழப்பு  ஈரானுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை சுமார் 140 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும், 7 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.குவைத் மற்றும் சவூதி அரேபியாவில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவரை 7 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.சுமார் 140 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் 8 பேர் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.காயமடைந்தவர்களில் 108 வீரர்கள் ஏற்கனவே சிகிச்சைக்குப் பின் மீண்டும் தங்களது பணிகளுக்குத் திரும்பியுள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் சீன் பார்னெல் (Sean Parnell) தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement