இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, இம்முறை 13 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட பக்தர்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று மாலை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு, உற்சவ நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றன. விசேட ஆராதனைகளை யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையிலான அருட்தந்தையர்கள் வழிநடத்தினர்.
இன்று காலை நடைபெற்ற பிரதான திருவிழாத் திருப்பலி, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்களின் பங்கேற்புடன் ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலி நிறைவடைந்ததைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான திருவிழா உத்தியோகபூர்வமாக நிறைவு பெற்றது.
இந்தத் திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பிரதம நீதியரசர் பிரிதி பத்மன் சூரசேன, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட உள்ளிட்ட கடற்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை 13 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான பக்தர்கள் கடல் கடந்து வந்து புனித அந்தோனியாரின் அருளைப் பெற்றுக்கொண்டனர்.
பக்தர்களுக்கான போக்குவரத்து, உணவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினரும் யாழ். மாவட்ட செயலகமும் இணைந்து முன்னெடுத்திருந்தன.
கச்சதீவில் திரண்ட 13,500 பக்தர்கள்; கோலாகலமாக நிறைவடைந்த திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, இம்முறை 13 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட பக்தர்களின் பங்கேற்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.நேற்று மாலை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு, உற்சவ நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றன. விசேட ஆராதனைகளை யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையிலான அருட்தந்தையர்கள் வழிநடத்தினர்.இன்று காலை நடைபெற்ற பிரதான திருவிழாத் திருப்பலி, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்களின் பங்கேற்புடன் ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருப்பலி நிறைவடைந்ததைத் தொடர்ந்து இவ்வாண்டுக்கான திருவிழா உத்தியோகபூர்வமாக நிறைவு பெற்றது.இந்தத் திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பிரதம நீதியரசர் பிரிதி பத்மன் சூரசேன, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், யாழ்.மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட உள்ளிட்ட கடற்படை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை 13 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான பக்தர்கள் கடல் கடந்து வந்து புனித அந்தோனியாரின் அருளைப் பெற்றுக்கொண்டனர்.பக்தர்களுக்கான போக்குவரத்து, உணவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினரும் யாழ். மாவட்ட செயலகமும் இணைந்து முன்னெடுத்திருந்தன.