• Jul 22 2026

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது; 56 பேர் உயிரிழப்பு

Chithra / Jul 22nd 2026, 12:18 pm
image


நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


அதன்படி, நேற்று (21) மாத்திரம் 1,097 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, நாடளாவிய ரீதியில் 162 மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.


கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மே மாதத்தில் 8,590 பேரும், ஜூன் மாதத்தில் 21,535 பேரும், ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் மாத்திரம் 22,749 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாண்டில் டெங்கு நோய் காரணமாக 56 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளர்களின் இறப்பு விகிதம் 0.07 சதவீதமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாகாண ரீதியாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு 41,236 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.78 சதவீதமாகும்.


தென் மாகாணத்தில் 11,950 பேரும், மத்திய மாகாணத்தில் 6,603 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மாவட்ட ரீதியில் அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 16,478 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 15,540 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,454 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,228 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,135 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது; 56 பேர் உயிரிழப்பு நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 78,125 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, நேற்று (21) மாத்திரம் 1,097 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகளின்படி, நாடளாவிய ரீதியில் 162 மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.கடந்த சில மாதங்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மே மாதத்தில் 8,590 பேரும், ஜூன் மாதத்தில் 21,535 பேரும், ஜூலை மாதத்தின் முதல் 21 நாட்களில் மாத்திரம் 22,749 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாண்டில் டெங்கு நோய் காரணமாக 56 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளர்களின் இறப்பு விகிதம் 0.07 சதவீதமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாகாண ரீதியாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். அங்கு 41,236 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.78 சதவீதமாகும்.தென் மாகாணத்தில் 11,950 பேரும், மத்திய மாகாணத்தில் 6,603 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட ரீதியில் அதிக பாதிப்பு கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அங்கு 16,478 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 15,540 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,454 பேரும், கண்டி மாவட்டத்தில் 5,228 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,135 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement