க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரி 120 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த வகையிலேயே வேம்படி மகளீர் கல்லூரியில் 120 9 ஏ சித்திகளும் 36 8ஏ சித்திகளும் 25 7ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேம்படி மகளீர் கல்லூரியில் 265 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் மேற்குறிப்பிடப்பட்ட 181 மாணவர்களும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியில் 100 வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும்.
இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
120 9ஏ சித்திகளை அள்ளியது யாழ்.வேம்படி மகளீர் கல்லூரி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரி 120 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையிலேயே வேம்படி மகளீர் கல்லூரியில் 120 9 ஏ சித்திகளும் 36 8ஏ சித்திகளும் 25 7ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேம்படி மகளீர் கல்லூரியில் 265 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் மேற்குறிப்பிடப்பட்ட 181 மாணவர்களும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியில் 100 வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.