இந்த ஆண்டில் இதுவரை இடம்பெற்ற 944 விபத்துகளில் 1,007 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார் .
இதன்போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகையில்,
விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காக மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரைக் கைது செய்வது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவோரைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.
அதன்படி, ஜனவரி 1 முதல் மே 18 வரையிலான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 26,413 பேர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன் போது தெரிவித்தார்.
கோர விபத்துக்களில் சிக்கி 1,007 பேர் உயிரிழப்பு. இந்த ஆண்டில் இதுவரை இடம்பெற்ற 944 விபத்துகளில் 1,007 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார் .இதன்போது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகையில், விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்காக மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரைக் கைது செய்வது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவோரைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்வதாகத் தெரிவித்தார். அதன்படி, ஜனவரி 1 முதல் மே 18 வரையிலான காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 26,413 பேர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன் போது தெரிவித்தார்.