அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று(27) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 50 வயதான பெண்ணும், 41 முதல் 64 வயதிற்கு இடைப்பட்ட சந்தேகநபர்களுமே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் திருக்கோவில், ஹப்புத்தளை, இதல்கஸ்ஹின்ன, வத்தளை மற்றும் விநாயகபுரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 07 பேர் கைது. அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் விநாயகபுரம் 01 ஆம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக புதையல் தேடும் நோக்கில் அகழ்வில் ஈடுப்பட்ட பெண்ணொருவர் உள்ளிட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று(27) அதிகாலை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அகழ்வுக்கு பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் 50 வயதான பெண்ணும், 41 முதல் 64 வயதிற்கு இடைப்பட்ட சந்தேகநபர்களுமே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் திருக்கோவில், ஹப்புத்தளை, இதல்கஸ்ஹின்ன, வத்தளை மற்றும் விநாயகபுரம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.