• May 23 2026

இறால் பண்ணையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் பலி

Chithra / Oct 20th 2025, 1:26 pm
image


புத்தளம் - புளிச்சாக்குளம் பகுதியில் இறால் பண்ணையில் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா, விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய வசந்தம் தர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முந்தல், புளிச்சாக்குளம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரிந்து வந்த  குறித்த இளைஞர், வலிப்பு நோயாளி என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று இறால் பண்ணையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்துள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பண்ணையில் இருந்த மற்றையவர்கள் அவரை சிகிச்சைக்காக முந்தல் மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இறால் பண்ணையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இளைஞர் பலி புத்தளம் - புளிச்சாக்குளம் பகுதியில் இறால் பண்ணையில் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்து இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா, விஸ்வமடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய வசந்தம் தர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.முந்தல், புளிச்சாக்குளம் பகுதியில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரிந்து வந்த  குறித்த இளைஞர், வலிப்பு நோயாளி என விசாரணையில் தெரியவந்துள்ளது.சம்பவ தினத்தன்று இறால் பண்ணையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியில் விழுந்துள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.பண்ணையில் இருந்த மற்றையவர்கள் அவரை சிகிச்சைக்காக முந்தல் மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement