• Apr 14 2026

யாழில் வாள்களுடன் இளைஞன் கைது!

shanu / Apr 6th 2026, 11:19 pm
image



ஆபத்தான வாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 28வயதான இளைஞன் ஒருவர்  இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஏற்கனவே வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞனை நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டுதலின் கீழ் பொறுப்பதிகாரி மஞ்சுள தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் வாள்களுடன் இளைஞன் கைது ஆபத்தான வாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 28வயதான இளைஞன் ஒருவர்  இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஏற்கனவே வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞனை நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டுதலின் கீழ் பொறுப்பதிகாரி மஞ்சுள தலைமையிலான பொலிஸ் குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement