• Apr 15 2026

சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்த பாரஊர்தி; சாதுரியமாக பாய்ந்து தப்பித்த சாரதி

Chithra / Apr 7th 2026, 7:53 am
image

மஸ்கெலியா மின்னா பாதை ஊடாக சென்ற டிப்பர் ரக பாரஊர்தி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.


சாமி மலை நகரில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக பாரஊர்தி, வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 


இவ் விபத்தில் சாரதி வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பித்துள்ளார்.


எனினும் பக்கத்தில் அமர்ந்திருந்த நபருக்கு காயங்கள் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.


இந்த வீதி கடந்த முப்பது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பாரிய அளவிலான குன்றும் குழியுமாக காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது. 


விபத்து தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்த பாரஊர்தி; சாதுரியமாக பாய்ந்து தப்பித்த சாரதி மஸ்கெலியா மின்னா பாதை ஊடாக சென்ற டிப்பர் ரக பாரஊர்தி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.சாமி மலை நகரில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக பாரஊர்தி, வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் சாரதி வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பித்துள்ளார்.எனினும் பக்கத்தில் அமர்ந்திருந்த நபருக்கு காயங்கள் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.இந்த வீதி கடந்த முப்பது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பாரிய அளவிலான குன்றும் குழியுமாக காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement