• Nov 15 2025

ஹெராயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் கைது

Chithra / Nov 14th 2025, 9:48 am
image

 

ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெராயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த ஒரு இளைஞன், ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஹட்டன் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையைத் தொடர்ந்து, ஹட்டன்–பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.

அவர்களின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், பொலிஸார் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோதனை செய்தபோது, பிரதான வீதியின் அருகிலுள்ள புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் பொட்டலத்தை கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார். 

அவர்  6,000 ரூபா  செலுத்தி, ஈஸி கேஷ் அமைப்பு மூலம் போதைப்பொருள் பொட்டலத்தை வாங்கியிருப்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோதனையை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸ் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் விநியோக வலையமைப்பை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வியாபாரியை கைது செய்வதற்காக சந்தேக நபரின் தொலைப்பேசி தரவுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.


ஹெராயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த இளைஞன் கைது  ஈஸி கேஷ் முறையின் மூலம் பணம் செலுத்தப்பட்ட ஹெராயின் பொட்டலத்தை எடுத்துச் செல்ல வந்த ஒரு இளைஞன், ஹட்டன் பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டார்.ஹட்டன் பகுதியில் நடைபெற்ற மற்றொரு சோதனையைத் தொடர்ந்து, ஹட்டன்–பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது பொலிஸ் அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.அவர்களின் நடத்தை சந்தேகத்துக்குரியதாக இருந்ததால், பொலிஸார் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோதனை செய்தபோது, பிரதான வீதியின் அருகிலுள்ள புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் பொட்டலத்தை கண்டுபிடித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஆவார். அவர்  6,000 ரூபா  செலுத்தி, ஈஸி கேஷ் அமைப்பு மூலம் போதைப்பொருள் பொட்டலத்தை வாங்கியிருப்பது விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.சோதனையை மேற்கொண்ட ஹட்டன் பொலிஸ் பிரிவு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் விநியோக வலையமைப்பை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட வியாபாரியை கைது செய்வதற்காக சந்தேக நபரின் தொலைப்பேசி தரவுகளை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement