எதிர்வரும் வாரங்களுக்குள் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து முக்கிய அரசியல்வாதியொருவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி கடந்த கோட்டாபய ஆட்சியில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த உரம் மோசடி தொடர்பில் ராஜபக்ச குடும்பத்தின் இளம் அரசியல்வாதியான சஷீந்திர ராஜபக்சவை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது தீவிரம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று அவருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் விரைவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரியவருகின்றது.
கோட்டாபய ஆட்சியில் நடந்த மோசடி - விரைவில் சிக்கவுள்ள ராஜபக்ச குடும்பத்தின் இளம் அரசியல்வாதி எதிர்வரும் வாரங்களுக்குள் ராஜபக்ச குடும்பத்தில் இருந்து முக்கிய அரசியல்வாதியொருவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன்படி கடந்த கோட்டாபய ஆட்சியில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த உரம் மோசடி தொடர்பில் ராஜபக்ச குடும்பத்தின் இளம் அரசியல்வாதியான சஷீந்திர ராஜபக்சவை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது தீவிரம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதேபோன்று அவருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் விரைவில் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் அவர் கைது செய்யப்படக் கூடும் என்று தெரியவருகின்றது.