• Oct 14 2026

கொழும்புக்கு வரப்போகும் ஆபத்து? அதிகாரிகளுக்கு இரண்டு வார காலக்கெடு! பிரதமரின் அவசர உத்தரவு!

Chithra / Oct 14th 2026, 12:14 pm
image


கொழும்பு மாவட்டத்தில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு முக்கிய பணிப்புரை விடுத்துள்ளார்.


அதன்படி, கொழும்பிலுள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் வடிகாலமைப்புகளையும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் துரிதமாகச் சுத்திகரிப்பதுடன், அவற்றைத் தொடர்ச்சியாகப் பராமரிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


நாரஹேன்பிட்டியிலுள்ள கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார்.


எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்பதால், கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


குறிப்பாக, மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கு ஏற்ற வகையில் கால்வாய்கள் மற்றும் வடிகாலமைப்புகளைச் சீரமைப்பதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதன்போது, கால்வாய்கள் மற்றும் வடிகாலமைப்புகளைச் சுத்திகரிப்பதில் எதிர்நோக்கப்படும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.


தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் நிலவும் சவால்கள் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்புக்கு வரப்போகும் ஆபத்து அதிகாரிகளுக்கு இரண்டு வார காலக்கெடு பிரதமரின் அவசர உத்தரவு கொழும்பு மாவட்டத்தில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு முக்கிய பணிப்புரை விடுத்துள்ளார்.அதன்படி, கொழும்பிலுள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் வடிகாலமைப்புகளையும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் துரிதமாகச் சுத்திகரிப்பதுடன், அவற்றைத் தொடர்ச்சியாகப் பராமரிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.நாரஹேன்பிட்டியிலுள்ள கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்தப் பணிப்புரையை வழங்கியுள்ளார்.எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்பதால், கொழும்பு நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.குறிப்பாக, மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கு ஏற்ற வகையில் கால்வாய்கள் மற்றும் வடிகாலமைப்புகளைச் சீரமைப்பதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்போது, கால்வாய்கள் மற்றும் வடிகாலமைப்புகளைச் சுத்திகரிப்பதில் எதிர்நோக்கப்படும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை, அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் நிலவும் சவால்கள் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement