தம்புளையில் படுக்கையில் உயிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தாயின் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் ஒரு கொலை என தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் சாட்சியமளிக்க வந்த உயிரிழந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புளை தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் 34 வயதான தாருகா கௌசல்யா நிஸ்ஸங்க என்ற ஒரு பிள்ளையின் தாயார் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 13 ஆம் திகதி தம்புள்ள, தித்தவெல்கொல்ல பகுதியில் உள்ள வீட்டின் அறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அவரது மனைவி பரீட்சை ஒன்றுக்காக படித்துவிட்டு மாலை 4.00 மணியளவில் படுக்கைக்கு சென்றதாகவும், இரவு 9 மணியளவில் அவரை எழுப்புமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது கணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, தனது மனைவியை எழுப்பச் சென்றதாகவும், ஆனால் அவர் எழுந்திருக்காததால், அவருக்கு உடல்நிலை சரியில்லை என நினைத்து 1990 அம்புலன்ஸ் சேவையை அழைத்ததாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்மூலம் வழங்கியுள்ளார்.
இருப்பினும், மரணம் தொடர்பாக பொலிஸாருக்கு எழுந்த சந்தேகங்களின் அடிப்படையில், மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தியதுடன் அது தொடர்பான சோதனைகளையும் முன்னெடுத்தனர்.
இதன்போது தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
குறித்த தம்பதியரின் 5 வயது குழந்தையின் சந்தேகத்திற்கிடமான நடத்தை மற்றும் குழந்தை மிகவும் பயந்து போயிருந்தமையினால் இந்த மரணம் தொடர்பாக மேலும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
படுக்கையிலேயே உயிரிழந்த இளம் தாய்; பிரேத பரிசோதனையில் வௌிவந்த உண்மை தம்புளையில் படுக்கையில் உயிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் தாயின் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் ஒரு கொலை என தெரியவந்துள்ளது.இது தொடர்பில் சாட்சியமளிக்க வந்த உயிரிழந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புளை தெரிவித்துள்ளனர்.கொலை செய்யப்பட்டவர் 34 வயதான தாருகா கௌசல்யா நிஸ்ஸங்க என்ற ஒரு பிள்ளையின் தாயார் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.கடந்த 13 ஆம் திகதி தம்புள்ள, தித்தவெல்கொல்ல பகுதியில் உள்ள வீட்டின் அறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.அவரது மனைவி பரீட்சை ஒன்றுக்காக படித்துவிட்டு மாலை 4.00 மணியளவில் படுக்கைக்கு சென்றதாகவும், இரவு 9 மணியளவில் அவரை எழுப்புமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது கணவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.அதற்கமைய, தனது மனைவியை எழுப்பச் சென்றதாகவும், ஆனால் அவர் எழுந்திருக்காததால், அவருக்கு உடல்நிலை சரியில்லை என நினைத்து 1990 அம்புலன்ஸ் சேவையை அழைத்ததாகவும் அவர் பொலிஸாரிடம் வாக்மூலம் வழங்கியுள்ளார்.இருப்பினும், மரணம் தொடர்பாக பொலிஸாருக்கு எழுந்த சந்தேகங்களின் அடிப்படையில், மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தியதுடன் அது தொடர்பான சோதனைகளையும் முன்னெடுத்தனர். இதன்போது தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. குறித்த தம்பதியரின் 5 வயது குழந்தையின் சந்தேகத்திற்கிடமான நடத்தை மற்றும் குழந்தை மிகவும் பயந்து போயிருந்தமையினால் இந்த மரணம் தொடர்பாக மேலும் சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.