• Sep 20 2026

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற இளைஞர்!

Ziya / Sep 19th 2026, 4:52 pm
image


சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு, பாம்பு கடித்த இளைஞர் ஒருவர் அதே பாம்பை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து கொண்டு சிகிச்சைக்காக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குன்றத்தூர், கிருகம்பாக்கம் பகுதியில் மரப்பலகையின் கீழ் பதுங்கியிருந்த சிறிய பாம்பு, அங்கு வேலை செய்து வந்த மையூர் சாகீக் (36) என்பவரின் கையை கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்த அவர், தன்னை கடித்த பாம்பையும் பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.


மருத்துவர்கள் பாம்பை பரிசோதித்தபோது, அது விஷமற்ற சிறிய தண்ணீர் பாம்பு எனத் தெரிவித்தனர். இதையடுத்து இளைஞருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது.


தன்னை கடித்த பாம்பையே மருத்துவமனைக்கு கொண்டு வந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சென்ற இளைஞர் சென்னை தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு, பாம்பு கடித்த இளைஞர் ஒருவர் அதே பாம்பை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து கொண்டு சிகிச்சைக்காக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குன்றத்தூர், கிருகம்பாக்கம் பகுதியில் மரப்பலகையின் கீழ் பதுங்கியிருந்த சிறிய பாம்பு, அங்கு வேலை செய்து வந்த மையூர் சாகீக் (36) என்பவரின் கையை கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்த அவர், தன்னை கடித்த பாம்பையும் பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.மருத்துவர்கள் பாம்பை பரிசோதித்தபோது, அது விஷமற்ற சிறிய தண்ணீர் பாம்பு எனத் தெரிவித்தனர். இதையடுத்து இளைஞருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது.தன்னை கடித்த பாம்பையே மருத்துவமனைக்கு கொண்டு வந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது

Advertisement

Advertisement

Advertisement