திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சேருநுவர – கந்தளாய் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் வாகனத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
முந்திச் செல்ல முயன்றபோது தடம்புரண்ட பட்டா - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சாரதி திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர பகுதியில் பட்டா ரக வாகனம் ஒன்று புரண்டு வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.சேருநுவர – கந்தளாய் பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, குறித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்தில் வாகனத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.