• Apr 16 2026

மட்டக்களப்பில் நடைபெற்ற உலக நாடக தினக் கலந்துரையாடலும் ஆற்றுகையும்!

Ziya / Mar 28th 2026, 4:56 pm
image

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், உலக நாடக தினத்தை முன்னிட்டு சிறப்பு கலந்துரையாடலும் ஆற்றுகையும் மட்டக்களப்பு முனைக்காடு உக்டா சமூக வள நிலையத்தில் நேற்று (27) மாலை  நடைபெற்றது.


பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி த.மேகராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில், பிரபல நடிகரும் கவிஞருமான ஜெயபாலன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.


இதன்போது மத்தள ஓசையுடன் மங்கலகரமாக ஆரம்பிக்கப்பட்டதுடன், பாரம்பரியக் கலைகளான கூத்து மற்றும் வசந்தன் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் இதன்போது ஆக செய்யப்பட்டன.


இதன்போது கூத்துக் கலைஞர்கள், நாடக கலைஞர்கள், சமூகப் பற்றாளர்கள், கலை இலக்கியத்தில் ஈடுபாடுள்ள பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



மட்டக்களப்பில் நடைபெற்ற உலக நாடக தினக் கலந்துரையாடலும் ஆற்றுகையும் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், உலக நாடக தினத்தை முன்னிட்டு சிறப்பு கலந்துரையாடலும் ஆற்றுகையும் மட்டக்களப்பு முனைக்காடு உக்டா சமூக வள நிலையத்தில் நேற்று (27) மாலை  நடைபெற்றது.பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி த.மேகராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிழ்வில், பிரபல நடிகரும் கவிஞருமான ஜெயபாலன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.இதன்போது மத்தள ஓசையுடன் மங்கலகரமாக ஆரம்பிக்கப்பட்டதுடன், பாரம்பரியக் கலைகளான கூத்து மற்றும் வசந்தன் போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் இதன்போது ஆக செய்யப்பட்டன.இதன்போது கூத்துக் கலைஞர்கள், நாடக கலைஞர்கள், சமூகப் பற்றாளர்கள், கலை இலக்கியத்தில் ஈடுபாடுள்ள பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement