• May 06 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்று திரும்பிய பெண் உயிரிழப்பு

Chithra / May 5th 2025, 11:47 am
image


சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண்ணொருவர் நல்லதன்னி - சிவனொளிபாத மலை வீதியில் ஜப்பான் அமைதி விகாரைக்கு கீழே அமைந்துள்ள சிவப்பு பாலம் அருகில்  கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ, வல்பிட்ட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. 

படுகாயமடைந்த பெண்ணை நல்லதன்னி பொலிஸார் மற்றும் மவுஸ்ஸாகலை இராணுவ முகாமின் அதிகாரிகள் நல்லதன்னி சுகாதார சேவைகள் மையத்தின் அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

உயிரிழந்த பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் கிராமவாசிகள் குழுவுடன் பேருந்தில் சிவனொளிபாத மலை யாத்திரைக்காக சென்ற நிலையில், நேற்று (04) சிவனொளிபாத மலை யாத்திரையை முடித்துவிட்டு நல்லதன்னி பகுதிக்கு மீண்டும் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்தை சந்தித்தார். 

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதன்னி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்று திரும்பிய பெண் உயிரிழப்பு சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண்ணொருவர் நல்லதன்னி - சிவனொளிபாத மலை வீதியில் ஜப்பான் அமைதி விகாரைக்கு கீழே அமைந்துள்ள சிவப்பு பாலம் அருகில்  கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அக்குரஸ்ஸ, வல்பிட்ட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த பெண்ணை நல்லதன்னி பொலிஸார் மற்றும் மவுஸ்ஸாகலை இராணுவ முகாமின் அதிகாரிகள் நல்லதன்னி சுகாதார சேவைகள் மையத்தின் அம்புலன்ஸ் மூலம் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் கிராமவாசிகள் குழுவுடன் பேருந்தில் சிவனொளிபாத மலை யாத்திரைக்காக சென்ற நிலையில், நேற்று (04) சிவனொளிபாத மலை யாத்திரையை முடித்துவிட்டு நல்லதன்னி பகுதிக்கு மீண்டும் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்தை சந்தித்தார். மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதன்னி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement