• Dec 11 2024

சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் வந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் - பெண் பரிதாப மரணம்

Chithra / Nov 12th 2024, 8:25 am
image

 

தென்பகுதியில் இருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் வந்தவர்களின் கார் மீது பட்டா ரக வாகனம் மோதியதில் பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். 

இதன்போது கம்பஹாவைச் சேர்ந்த 60 வயதுடைய டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடியே குசும்புஸ்பராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுற்றுலாவிற்காக கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் வந்துள்ளனர். 

இதன் போது தெல்லிப்பழை சந்திக்கும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் (10) பட்டா ரக வாகனமும், காரும் மோதி விபத்து சம்பவித்தது.

இதன்போது, படுகாயமடைந்த குறித்த பெண் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் அவர் உயிரிழந்தார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் வந்த குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் - பெண் பரிதாப மரணம்  தென்பகுதியில் இருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் வந்தவர்களின் கார் மீது பட்டா ரக வாகனம் மோதியதில் பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது கம்பஹாவைச் சேர்ந்த 60 வயதுடைய டோனி ப்ரெயன் பெரேரா ரணசிங்க வீரக்கொடியே குசும்புஸ்பராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுற்றுலாவிற்காக கடந்த ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணம் வந்துள்ளனர். இதன் போது தெல்லிப்பழை சந்திக்கும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் (10) பட்டா ரக வாகனமும், காரும் மோதி விபத்து சம்பவித்தது.இதன்போது, படுகாயமடைந்த குறித்த பெண் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் அவர் உயிரிழந்தார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement