• Aug 23 2025

ஏழுமாத காலத்திற்குள் வீதி விபத்துக்களால் 1700 பேர் பலி

Chithra / Aug 23rd 2025, 11:15 am
image

நடப்பு ஆண்டின் கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் சுமார் 1605 வீதி விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கு மேலதிகமாக பொலிஸ் முறைப்பாடு இல்லாமல் சம்பவ இடத்தில் சமரசமாகத் தீர்த்துக் கொள்ளப்பட்ட வீதி விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே போன்று நடப்பு ஆண்டில் வீதி விபத்துக்கள் காரணமாக கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் 1700 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டின் 12 மாத காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழந்த மொத்த எண்ணிக்கையான 1503 இலும் பார்க்க இந்த ஆண்டின் ஏழு மாத காலப்பகுதிக்குள்ளாகவே 193 உயிரிழப்புகள் அதிகமாக நேர்ந்துள்ளன.

தூக்கம், களைப்பு காரணமான அசதி அல்லது போதைப் பழக்கம் போன்றவையே பெரும்பாலான வீதி விபத்துக்களின் காரணமாக அமைந்துள்ளது.  

ஏழுமாத காலத்திற்குள் வீதி விபத்துக்களால் 1700 பேர் பலி நடப்பு ஆண்டின் கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் சுமார் 1605 வீதி விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இதற்கு மேலதிகமாக பொலிஸ் முறைப்பாடு இல்லாமல் சம்பவ இடத்தில் சமரசமாகத் தீர்த்துக் கொள்ளப்பட்ட வீதி விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதே போன்று நடப்பு ஆண்டில் வீதி விபத்துக்கள் காரணமாக கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் 1700 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த ஆண்டின் 12 மாத காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழந்த மொத்த எண்ணிக்கையான 1503 இலும் பார்க்க இந்த ஆண்டின் ஏழு மாத காலப்பகுதிக்குள்ளாகவே 193 உயிரிழப்புகள் அதிகமாக நேர்ந்துள்ளன.தூக்கம், களைப்பு காரணமான அசதி அல்லது போதைப் பழக்கம் போன்றவையே பெரும்பாலான வீதி விபத்துக்களின் காரணமாக அமைந்துள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement