• May 10 2026

பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா? ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

Chithra / Mar 18th 2026, 7:56 am
image


இலங்கையின் தற்போதைய எரிசக்தி சவால்களை முறியடிக்க ரஷ்யாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


உலகளாவிய ரீதியில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அரசின் திட்டங்கள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.


தற்போது நிலவும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை நிர்வகிக்கும் நோக்கில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,"இரு நாடுகளுக்கு இடையிலான இத்தகைய உடன்படிக்கைகள் அரசுகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ நடைமுறைகளைக் கொண்டவை.


எனவே, இவற்றை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது, இதற்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும், என சுட்டிக்காட்டினார்.


காலதாமதம் குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தற்போதைய சூழ்நிலையானது உலகளாவிய போரினால் ஏற்பட்ட ஒரு பாரிய நெருக்கடியின் ஒரு பகுதி என்பதை வலியுறுத்தினார்.


இது பொருளாதார ரீதியாக வலுவான நாடுகளையும் பாதித்துள்ளதை அவர் நினைவுபடுத்தினார்.


அத்துடன் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் மின்சாரத் தடை ஏற்படலாம் என்ற அச்சத்தை நிராகரித்த ஜனாதிபதி, பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என உறுதியளித்தார்.


பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு இலங்கையின் தற்போதைய எரிசக்தி சவால்களை முறியடிக்க ரஷ்யாவுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.உலகளாவிய ரீதியில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அரசின் திட்டங்கள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.தற்போது நிலவும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை நிர்வகிக்கும் நோக்கில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,"இரு நாடுகளுக்கு இடையிலான இத்தகைய உடன்படிக்கைகள் அரசுகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ நடைமுறைகளைக் கொண்டவை.எனவே, இவற்றை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியாது, இதற்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும், என சுட்டிக்காட்டினார்.காலதாமதம் குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த ஜனாதிபதி, தற்போதைய சூழ்நிலையானது உலகளாவிய போரினால் ஏற்பட்ட ஒரு பாரிய நெருக்கடியின் ஒரு பகுதி என்பதை வலியுறுத்தினார்.இது பொருளாதார ரீதியாக வலுவான நாடுகளையும் பாதித்துள்ளதை அவர் நினைவுபடுத்தினார்.அத்துடன் தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் மின்சாரத் தடை ஏற்படலாம் என்ற அச்சத்தை நிராகரித்த ஜனாதிபதி, பண்டிகைக் காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement