மாகாண ஆளுநர்கள் இராஜினாமா செய்வதைப் போல, தற்போதைய பிரதமரும் தனது பதவியை இராஜினாமா செய்வாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆளுநர் தனது பதவியில் இருந்து விலகியமைக்கு சில தரப்பினரின் அழுத்தங்களே காரணம் எனச் சந்தேகிப்பதாகத் தெரிவித்த அவர், அரசில் உள்ளவர்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அடுத்தடுத்து நியமிக்கப்படும் ஆளுநர்கள் எத்தனை நாள்கள் பதவியில் நீடிப்பார்கள் என்பது கேள்விக்குறியே என்றும் அவர் குறிப்பிட்டார்.
நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் அண்மைய கருத்துகள் குறித்தும் சீலரத்ன தேரர் விமர்சித்தார்.
தங்களுக்கு இன்னும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கிராமங்களுக்குச் சென்று கூறிவருவது அரசு மீதான நம்பிக்கையைச் சிதைக்கின்றது. அரசுக்கு முழு அதிகாரமும் இருக்கும்போது, அதிகாரமில்லை என்று கூறுவது பொய்யானதாகும்.
இளமைக் காலத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்குச் சிறிதளவேனும் அறிவு இருக்க வேண்டும். போதைப்பொருள்களை உட்கொண்டுவிட்டு மேடைகளில் பேசுகின்றார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது. இவர்களின் இத்தகைய பேச்சுகள் ஜனாதிபதியின் கௌரவத்துக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன" என்று அவர் சாடினார்.
இந்தச் சூழலில், மாகாண ஆளுநர்களைப் போல் கலாநிதியாக இருக்கும் தற்போதைய பிரதமரும் தனது பதவியில் இருந்து விரைவில் விலகுவாரோ என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் பதவி விலகுவாரா – பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கேள்வி மாகாண ஆளுநர்கள் இராஜினாமா செய்வதைப் போல, தற்போதைய பிரதமரும் தனது பதவியை இராஜினாமா செய்வாரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய மாகாண ஆளுநர் தனது பதவியில் இருந்து விலகியமைக்கு சில தரப்பினரின் அழுத்தங்களே காரணம் எனச் சந்தேகிப்பதாகத் தெரிவித்த அவர், அரசில் உள்ளவர்கள் அனைவரும் பதவிகளிலிருந்து விலகி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மேலும், அடுத்தடுத்து நியமிக்கப்படும் ஆளுநர்கள் எத்தனை நாள்கள் பதவியில் நீடிப்பார்கள் என்பது கேள்விக்குறியே என்றும் அவர் குறிப்பிட்டார்.நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் அண்மைய கருத்துகள் குறித்தும் சீலரத்ன தேரர் விமர்சித்தார்.தங்களுக்கு இன்னும் அதிகாரம் வழங்கப்படவில்லை என்று கிராமங்களுக்குச் சென்று கூறிவருவது அரசு மீதான நம்பிக்கையைச் சிதைக்கின்றது. அரசுக்கு முழு அதிகாரமும் இருக்கும்போது, அதிகாரமில்லை என்று கூறுவது பொய்யானதாகும்.இளமைக் காலத்தில் போராட்டம் நடத்தியவர்களுக்குச் சிறிதளவேனும் அறிவு இருக்க வேண்டும். போதைப்பொருள்களை உட்கொண்டுவிட்டு மேடைகளில் பேசுகின்றார்களா என்று கேட்கத் தோன்றுகின்றது. இவர்களின் இத்தகைய பேச்சுகள் ஜனாதிபதியின் கௌரவத்துக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றன" என்று அவர் சாடினார்.இந்தச் சூழலில், மாகாண ஆளுநர்களைப் போல் கலாநிதியாக இருக்கும் தற்போதைய பிரதமரும் தனது பதவியில் இருந்து விரைவில் விலகுவாரோ என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.