• May 01 2026

அநுர அரசு செய்யாததை, IMF செய்யுமா? மே தினத்தை கரிநாளாக மாற்றி போராடிய முத்துநகர் விவசாயிகள்!

Chithra / May 1st 2026, 11:13 am
image

திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  முத்துநகர் விவசாயிகள்  தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று கறுப்பாடை அணிந்து, பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குறித்த போராட்டம் திருகோணமலை கண்டி பிரதான வீதியின் முத்து நகர் சந்தியில் இடம்பெற்றது.


விவசாய காணிகளை சூரையாடி தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின்சார உற்பத்திக்காக வழங்கப்பட்டதை கண்டித்து  தொழிலாளர் தினத்தை கரிநாளாக மாற்றி போராடினர்.


எமது நிலம் எமக்கு வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், நலிவடைந்த உழவருக்கு  Imf நீதி பெற்றுத்தா, முத்துநகர் விவசாய காணிகளை மீள தா போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


போராட்டக்காரர்கள் கருத்துத் தெரிவிக்கையில், 

  

முத்துநகர் சிறுபான்மை மக்களான நாங்கள் இந்த 55 வருட காலத்தில் சகல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளையும் பார்த்துள்ளோம். ஆனால் எமக்கு எந்தவித நீதியும் கிடைக்கவில்லை.  குறிப்பாக மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் எமக்கு விவசாய மானியம் கிடைக்கபெற்றது.


ஆனால் இந்த NPP அரசு, தலையை தடவி கண்ணை பறித்து அவமானப்படுத்தி அட்டூழியம் செய்து அராஜகமாக எங்களை எங்கள் பூர்வீக காணியில் இருந்து வெளியேற்றியது.


இதை விட கொடுமை முந்தைய அரசுகளுக்கு எதிராக எங்களை  அமைச்சர்  அருண் கேமச்சந்திரா போன்றவர்கள் தூண்டிவிட்டு  நாங்கள் உங்களோடு, ஆக்கிரமிப்புக்கு எதிராக இருக்கிறோம். உங்களுக்கு நில உரிமைப்பத்திரம் வாங்கித்தருகிறோம் என்று  நம்பவைத்து நாடகமாடி இன்று ஆட்சிக்கு வந்ததும், அதே ஏகாபத்தியத்திற்கு எங்கள் வயல்காணிகளை தாரைவார்க்கிறார்கள்.


அருண் கேமசந்திரா இன்று எங்கள் நில உரிமை போராட்டத்தை கொச்சைப்படுத்தி பிழையான தகவல்களை ஜனாதிபதிக்கும் ,பிரதமருக்கும் தெரிவித்து வருகிறார். 


IMF அதிகாரிகளே...! இங்கு எங்கே சமூக நிலைத்தன்மை உள்ளது. இன்று வரை சமூக வேறுபாட்டோடு தான் இந்த அரசு முந்தைய அரசுகளை விட ஏமாற்று நாடகத்தன்மையோடு பாசிசமாக செயல்படுகிறது..


ஆகவே,  கண்ணீரோடு வாழும்  முத்துநகர் மக்களின்  வாழ்க்கையையும் காப்பாற்றுங்கள். அரசு செய்யாததை IMF செய்யும் என்று முத்துநகர் மக்கள் முழுமையாக நம்புகிறார்கள் என தெரிவித்தனர்.  


அநுர அரசு செய்யாததை, IMF செய்யுமா மே தினத்தை கரிநாளாக மாற்றி போராடிய முத்துநகர் விவசாயிகள் திருகோணமலை - பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  முத்துநகர் விவசாயிகள்  தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று கறுப்பாடை அணிந்து, பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த போராட்டம் திருகோணமலை கண்டி பிரதான வீதியின் முத்து நகர் சந்தியில் இடம்பெற்றது.விவசாய காணிகளை சூரையாடி தனியார் கம்பனிகளுக்கு சூரிய மின்சார உற்பத்திக்காக வழங்கப்பட்டதை கண்டித்து  தொழிலாளர் தினத்தை கரிநாளாக மாற்றி போராடினர்.எமது நிலம் எமக்கு வேண்டும், விவசாயிகளுக்கு நீதி வேண்டும், நலிவடைந்த உழவருக்கு  Imf நீதி பெற்றுத்தா, முத்துநகர் விவசாய காணிகளை மீள தா போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டக்காரர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,   முத்துநகர் சிறுபான்மை மக்களான நாங்கள் இந்த 55 வருட காலத்தில் சகல நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளையும் பார்த்துள்ளோம். ஆனால் எமக்கு எந்தவித நீதியும் கிடைக்கவில்லை.  குறிப்பாக மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் எமக்கு விவசாய மானியம் கிடைக்கபெற்றது.ஆனால் இந்த NPP அரசு, தலையை தடவி கண்ணை பறித்து அவமானப்படுத்தி அட்டூழியம் செய்து அராஜகமாக எங்களை எங்கள் பூர்வீக காணியில் இருந்து வெளியேற்றியது.இதை விட கொடுமை முந்தைய அரசுகளுக்கு எதிராக எங்களை  அமைச்சர்  அருண் கேமச்சந்திரா போன்றவர்கள் தூண்டிவிட்டு  நாங்கள் உங்களோடு, ஆக்கிரமிப்புக்கு எதிராக இருக்கிறோம். உங்களுக்கு நில உரிமைப்பத்திரம் வாங்கித்தருகிறோம் என்று  நம்பவைத்து நாடகமாடி இன்று ஆட்சிக்கு வந்ததும், அதே ஏகாபத்தியத்திற்கு எங்கள் வயல்காணிகளை தாரைவார்க்கிறார்கள்.அருண் கேமசந்திரா இன்று எங்கள் நில உரிமை போராட்டத்தை கொச்சைப்படுத்தி பிழையான தகவல்களை ஜனாதிபதிக்கும் ,பிரதமருக்கும் தெரிவித்து வருகிறார். IMF அதிகாரிகளே. இங்கு எங்கே சமூக நிலைத்தன்மை உள்ளது. இன்று வரை சமூக வேறுபாட்டோடு தான் இந்த அரசு முந்தைய அரசுகளை விட ஏமாற்று நாடகத்தன்மையோடு பாசிசமாக செயல்படுகிறது.ஆகவே,  கண்ணீரோடு வாழும்  முத்துநகர் மக்களின்  வாழ்க்கையையும் காப்பாற்றுங்கள். அரசு செய்யாததை IMF செய்யும் என்று முத்துநகர் மக்கள் முழுமையாக நம்புகிறார்கள் என தெரிவித்தனர்.  

Advertisement

Advertisement

Advertisement