• Aug 19 2025

எரிபொருள் விலை குறையாதா? கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தங்களால் சிக்கல்! அமைச்சர் பகிரங்கம்

Chithra / Aug 19th 2025, 12:34 pm
image

நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாமைக்கு கடந்தகால அரசாங்கங்களே காரணம் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுடன் கடந்த அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ஓயில் நிறுவனம், ஆர்.எம். பார்க் தனியார் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால், எரிபொருள் விலையைக் குறைத்தால், அந்த நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறையாதா கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தங்களால் சிக்கல் அமைச்சர் பகிரங்கம் நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாமைக்கு கடந்தகால அரசாங்கங்களே காரணம் என எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுடன் கடந்த அரசாங்கம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.இந்தியன் ஓயில் நிறுவனம், ஆர்.எம். பார்க் தனியார் நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களால், எரிபொருள் விலையைக் குறைத்தால், அந்த நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement