• Apr 14 2026

மீண்டும் உயருமா மின்கட்டணம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலனை!

Chithra / Apr 10th 2026, 1:19 pm
image

நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்காக மேலதிக மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அனுமதிகோரி தேசிய கட்டமைப்பு நிர்வாக தனியார் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் பரிசீலனை செய்து வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதுதொடர்பில் பரிசீலனை செய்து எதிர்வரும் சில தினங்களில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் என்று அந்த ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.


2026ஆம் ஆண்டுக்காக ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்காக 15 சதவீதம் வரையான மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்காக தேசியக் கட்டமைப்பு நிர்வாக தனியார் நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.


மின் உற்பத்தியின்போது இடம்பெறும் மேலதிக இடம்பெறும் 16 பில்லியன் ரூபா செலவை ஈடுசெய்வதற்காக இவ்வாறு மேலதிக அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அந்த நிறுவனம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் உயருமா மின்கட்டணம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிசீலனை நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்காக மேலதிக மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அனுமதிகோரி தேசிய கட்டமைப்பு நிர்வாக தனியார் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் பரிசீலனை செய்து வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதுதொடர்பில் பரிசீலனை செய்து எதிர்வரும் சில தினங்களில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம் என்று அந்த ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.2026ஆம் ஆண்டுக்காக ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்காக 15 சதவீதம் வரையான மின் கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்காக தேசியக் கட்டமைப்பு நிர்வாக தனியார் நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.மின் உற்பத்தியின்போது இடம்பெறும் மேலதிக இடம்பெறும் 16 பில்லியன் ரூபா செலவை ஈடுசெய்வதற்காக இவ்வாறு மேலதிக அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அந்த நிறுவனம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement