யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம்(26.05.2026) விஜயம் செய்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு கள ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது உயர் பாதுகாப்பு வலயத்தின் காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக பலாலி வீதியின் கிழக்கில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரச அதிபரால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 1986 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்திற்கான காணி விஸ்திரிக்கப்பட்ட போது அக் காணிக்கான நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை என அரச அதிபரால் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, விரைவில் கொழும்பில் தனியான கலந்துரையாடலில் இது தொடர்பாக ஆராய்வதாக பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வழிபாட்டுத்தலங்களில் வழிபடுவதற்கான நடவடிக்கைகளையும், வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதேவேளை பாதுகாப்புப் படையினரின் இன்றைய நேரடிப் பார்வையின் அடிப்படையில், யாழ். குடாநாட்டில் பல முக்கிய விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் எல்லையை ஒட்டிய இயக்கச்சிப் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 20 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது.
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலையமைப்புக்குள் உள்ள பலாலி வீதியின் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மற்றுமொரு 20 ஏக்கர் காணி விடுவிப்பதற்குக் குறிவைக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை பகுதியில் படையினர் தங்களின் விடுதியாகப் பயன்படுத்தி வரும் பிரதான கட்டடத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள வரலாற்றுப் பழமைவாய்ந்த தென்னந் தோட்டக் காணியும் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு மேலதிகமாக, மன்னார் மாவட்டத்திலும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மன்னார் – முள்ளிக்குளம் கடற்படைத் தளப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகுதி நிலங்கள் மிக விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படுமா களத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம்(26.05.2026) விஜயம் செய்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு கள ஆய்வொன்றினை மேற்கொண்டிருந்தார்.இதன் போது உயர் பாதுகாப்பு வலயத்தின் காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக பலாலி வீதியின் கிழக்கில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரச அதிபரால் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இவ் விடயம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.மேலும், 1986 ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்திற்கான காணி விஸ்திரிக்கப்பட்ட போது அக் காணிக்கான நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை என அரச அதிபரால் பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோது, விரைவில் கொழும்பில் தனியான கலந்துரையாடலில் இது தொடர்பாக ஆராய்வதாக பிரதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வழிபாட்டுத்தலங்களில் வழிபடுவதற்கான நடவடிக்கைகளையும், வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.இதேவேளை பாதுகாப்புப் படையினரின் இன்றைய நேரடிப் பார்வையின் அடிப்படையில், யாழ். குடாநாட்டில் பல முக்கிய விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன என்று தெரியவருகின்றது.கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் எல்லையை ஒட்டிய இயக்கச்சிப் பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 20 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படவுள்ளது.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலையமைப்புக்குள் உள்ள பலாலி வீதியின் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மற்றுமொரு 20 ஏக்கர் காணி விடுவிப்பதற்குக் குறிவைக்கப்பட்டுள்ளது.காங்கேசன்துறை பகுதியில் படையினர் தங்களின் விடுதியாகப் பயன்படுத்தி வரும் பிரதான கட்டடத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள வரலாற்றுப் பழமைவாய்ந்த தென்னந் தோட்டக் காணியும் முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு மேலதிகமாக, மன்னார் மாவட்டத்திலும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, மன்னார் – முள்ளிக்குளம் கடற்படைத் தளப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகுதி நிலங்கள் மிக விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.