டிட்வா புயல் தற்போது யாழ்ப்பாணத்தின் வடக்கு திசையில் சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
இது வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும்,
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு கரையைத் தொடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டில் நிலவுகின்ற மழை இன்று முதல் குறையும், ஆனால் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சபரகமு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருகோணமலை முதல் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரை கடல் பகுதிகளில் 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும்.
மேலும் சில இடங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும்.
கடல் பிராந்தியங்கள் மிக கொந்தளிப்பாக இருக்கும், எனவே மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அந்தப் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடல் அலையுகள் 2.5 - 3 மீட்டர் உயரம் அடையும் வாய்ப்பு உள்ளது.
அதனுடன் கூடிய மழை மற்றும் கடுமையான காற்று காரணமாக கடல் பகுதிகள் கொ
"டிட்வா " புயல் எங்கே அதன் அடுத்த கட்ட நகர்வு என்ன சிரேஷ்ட வானிலை அதிகாரி விளக்கம் டிட்வா புயல் தற்போது யாழ்ப்பாணத்தின் வடக்கு திசையில் சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.இது வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும்,அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு கரையைத் தொடும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் நிலவுகின்ற மழை இன்று முதல் குறையும், ஆனால் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சபரகமு மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடையிடையே மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.திருகோணமலை முதல் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரை கடல் பகுதிகளில் 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும்.மேலும் சில இடங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும்.கடல் பிராந்தியங்கள் மிக கொந்தளிப்பாக இருக்கும், எனவே மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் அந்தப் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.கடல் அலையுகள் 2.5 - 3 மீட்டர் உயரம் அடையும் வாய்ப்பு உள்ளது. அதனுடன் கூடிய மழை மற்றும் கடுமையான காற்று காரணமாக கடல் பகுதிகள் கொ