• Oct 16 2026

இலங்கையின் தேர்தல் சட்டங்களில் என்ன நடக்கப்போகிறது? நாடாளுமன்றத்தில் முக்கிய நகர்வு!

Chithra / Oct 15th 2026, 11:13 am
image


இலங்கையில் தேர்தல் தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்து, தேவையான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் அடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற விசேட குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழுவின் கீழ் செயற்படும் நிபுணர் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.


குறித்த அறிக்கை, நாடாளுமன்ற விசேட குழுவின் தலைவரும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான பேராசிரியர் சந்தன அபேரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட 31 முன்மொழிவுகள் நிபுணர் குழுவினால் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.


அத்துடன், கடந்த காலங்களில் தேர்தல் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழுக்களின் அறிக்கைகளும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.


இதன் மூலம் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான பல்வேறு தரப்பினரின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.


இதற்கிடையில், தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், பொதுமக்கள் தமது திருத்தங்களையும் புதிய முன்மொழிவுகளையும் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.


தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் உள்வாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை விரிவாக ஆராய்ந்து, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இலங்கையின் தேர்தல் சட்டங்களில் என்ன நடக்கப்போகிறது நாடாளுமன்றத்தில் முக்கிய நகர்வு இலங்கையில் தேர்தல் தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்து, தேவையான மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் அடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கை நாடாளுமன்ற விசேட குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழுவின் கீழ் செயற்படும் நிபுணர் குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கை, நாடாளுமன்ற விசேட குழுவின் தலைவரும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான பேராசிரியர் சந்தன அபேரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக பொதுமக்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட 31 முன்மொழிவுகள் நிபுணர் குழுவினால் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.அத்துடன், கடந்த காலங்களில் தேர்தல் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழுக்களின் அறிக்கைகளும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.இதன் மூலம் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான பல்வேறு தரப்பினரின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையில், தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், பொதுமக்கள் தமது திருத்தங்களையும் புதிய முன்மொழிவுகளையும் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் உள்வாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளை விரிவாக ஆராய்ந்து, எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement