நடைப்பயிற்சி என்பது உடல்நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அனைவரும் அறிந்ததே.
ஆனால், எட்டு வடிவ (Figure 8) நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சாதாரண நடைப்பயிற்சியை விட கூடுதல் ஆரோக்கிய பலன்களைப் பெற முடியும் என கூறப்படுகிறது.
எட்டு வடிவ நடைப்பயிற்சி செய்வது எப்படி?
இந்த நடைப்பயிற்சியை தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை, ஒன்று அல்லது இரு வேளைகளில் செய்வது போதுமானது.
ஒரு அறையிலோ அல்லது திறந்த வெளி இடத்திலோ,கிழக்கு – மேற்கு திசையில் ஒரு கோடு வரைந்து,அதேபோல் 10 அடி இடைவெளியில் மற்றொரு கோடு வரைந்து,
அந்த இடைவெளிக்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
இந்த பயிற்சியை தெற்கு–வடக்கு அல்லது வடக்கு–தெற்கு நோக்கி செய்வது சிறந்ததாகக் கூறப்படுகிறது.
எட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள்,இரத்த அழுத்தம் குறைகிறது,பாத வெடிப்பு, பாத வலி, மூட்டு வலிகள் நிவாரணம் பெறுகின்றன,குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் குறைகிறது,முழுமையான சுவாசத்தால் மார்புச் சளி நீங்க உதவுகிறது,இரண்டு நாசிகளும் முழுமையாக செயல்படுவதால் நாசிச் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது,கண்பார்வை மேம்படுகிறது; ஆரம்பநிலையில் கண்ணாடி அணிவது தவிர்க்கப்படலாம்,செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது,உடல்சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக உணர முடிகிறது
இந்த எட்டு வடிவ நடைப்பயிற்சியை காலை மற்றும் மாலை 1 மணிநேரம் தொடர்ந்து மேற்கொண்டால், உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து, உள்ளங்கை மற்றும் விரல்கள் சிவப்பாக மாறுவதை உணரலாம். இதனால் முதுமை குறைந்து உடல் இளமையாகும் என கூறப்படுகிறது.
மேலும், சர்க்கரை நோய், குடலிறக்க நோய் (Hernia) போன்றவற்றிற்கும் இது உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்த பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன், குறிப்பாக நீண்டகால நோய்கள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
எட்டு வடிவ நடைப்பயிற்சி தொடர்பில் தெரிய வேண்டியவை நடைப்பயிற்சி என்பது உடல்நலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அனைவரும் அறிந்ததே. ஆனால், எட்டு வடிவ (Figure 8) நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சாதாரண நடைப்பயிற்சியை விட கூடுதல் ஆரோக்கிய பலன்களைப் பெற முடியும் என கூறப்படுகிறது.எட்டு வடிவ நடைப்பயிற்சி செய்வது எப்படிஇந்த நடைப்பயிற்சியை தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை, ஒன்று அல்லது இரு வேளைகளில் செய்வது போதுமானது.ஒரு அறையிலோ அல்லது திறந்த வெளி இடத்திலோ,கிழக்கு – மேற்கு திசையில் ஒரு கோடு வரைந்து,அதேபோல் 10 அடி இடைவெளியில் மற்றொரு கோடு வரைந்து,அந்த இடைவெளிக்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.இந்த பயிற்சியை தெற்கு–வடக்கு அல்லது வடக்கு–தெற்கு நோக்கி செய்வது சிறந்ததாகக் கூறப்படுகிறது.எட்டு வடிவ நடைப்பயிற்சியின் நன்மைகள்,இரத்த அழுத்தம் குறைகிறது,பாத வெடிப்பு, பாத வலி, மூட்டு வலிகள் நிவாரணம் பெறுகின்றன,குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் குறைகிறது,முழுமையான சுவாசத்தால் மார்புச் சளி நீங்க உதவுகிறது,இரண்டு நாசிகளும் முழுமையாக செயல்படுவதால் நாசிச் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது,கண்பார்வை மேம்படுகிறது; ஆரம்பநிலையில் கண்ணாடி அணிவது தவிர்க்கப்படலாம்,செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது,உடல்சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக உணர முடிகிறதுஇந்த எட்டு வடிவ நடைப்பயிற்சியை காலை மற்றும் மாலை 1 மணிநேரம் தொடர்ந்து மேற்கொண்டால், உடலின் ரத்த ஓட்டம் அதிகரித்து, உள்ளங்கை மற்றும் விரல்கள் சிவப்பாக மாறுவதை உணரலாம். இதனால் முதுமை குறைந்து உடல் இளமையாகும் என கூறப்படுகிறது.மேலும், சர்க்கரை நோய், குடலிறக்க நோய் (Hernia) போன்றவற்றிற்கும் இது உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.இந்த பயிற்சிகளை மேற்கொள்வதற்கு முன், குறிப்பாக நீண்டகால நோய்கள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.