• Jun 20 2025

வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபை பெரமுனவின் வசம்!

shanuja / Jun 19th 2025, 12:40 pm
image

வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபையின்  அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது. 


உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று சபைகளுக்கான  தெரிவுகள் வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்று வரும் நிலையில் வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபையில் நேற்று (18) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 


15 உறுப்பினர்களைக் கொண்ட வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 07 இடங்களைப் பெற்றுள்ளது. மீதமுள்ள 08 இடங்களை எதிர்க்கட்சிகள் பெற்றன. 


எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அதன் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


அதற்கமைய இடம்பெற்ற தேர்தல் வாக்கெடுப்பின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் 08 வாக்குகளையும்  ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் 07 வாக்குகளையும் பெற்றனர்.


அதற்கமைய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொடிவல மரகே வசந்த தலைவராகவும், சமகி ஜன பலவேகயவைப் பிரதிநிதித்துவப்படுத்தி துசித சாமர துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபை பெரமுனவின் வசம் வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபையின்  அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெற்று சபைகளுக்கான  தெரிவுகள் வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்று வரும் நிலையில் வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபையில் நேற்று (18) வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 15 உறுப்பினர்களைக் கொண்ட வெலிவிட்டிய திவிதுர பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 07 இடங்களைப் பெற்றுள்ளது. மீதமுள்ள 08 இடங்களை எதிர்க்கட்சிகள் பெற்றன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அதன் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.அதற்கமைய இடம்பெற்ற தேர்தல் வாக்கெடுப்பின் போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் 08 வாக்குகளையும்  ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் 07 வாக்குகளையும் பெற்றனர்.அதற்கமைய பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொடிவல மரகே வசந்த தலைவராகவும், சமகி ஜன பலவேகயவைப் பிரதிநிதித்துவப்படுத்தி துசித சாமர துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement