• May 13 2025

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு எவரையும் விலைக்கு வாங்கப் போவதில்லை: விஜித ஹேரத் உறுதி..!

Sharmi / May 13th 2025, 9:17 am
image

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி சிறப்புரிமைகளையோ, பணத்தையோ வழங்கி எவரையும் விலைக்கு வாங்கப் போவதில்லை என்பதைப் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதையே பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். 

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியிலிருந்தே அதிகளவான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். 

48 உறுப்பினர்கள் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 29 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். 

அவர்களின் முதல்வர் வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் இளம் வேட்பாளருடன் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்திருக்கிறார்.

தொகுதியில் மேயர் வேட்பாளர் தோல்வியடைந்த நிலையிலும், மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாகக் கூறுவதற்கு வெட்கமில்லையா? அவர்கள் முயற்சித்தாலும் அதற்கான வாய்ப்பு இல்லை. 

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். 

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி சிறப்புரிமைகளையோ, பணத்தையோ வழங்கி எவரையும் விலைக்கு வாங்கப் போவதில்லை என்பதைப் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். 

உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் மோசமான பழைய முறைமையை எமது அரசாங்கம் ஒரு போதும் பின்பற்றாது.

நாம் பெற்ற வெற்றியை பலப்படுத்துவதற்கு ஏனைய உறுப்பினர்கள் விரும்பினால் அவர்களுடன் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்றத் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு எவரையும் விலைக்கு வாங்கப் போவதில்லை: விஜித ஹேரத் உறுதி. உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி சிறப்புரிமைகளையோ, பணத்தையோ வழங்கி எவரையும் விலைக்கு வாங்கப் போவதில்லை என்பதைப் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதையே பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியிலிருந்தே அதிகளவான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். 48 உறுப்பினர்கள் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து 29 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களின் முதல்வர் வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் இளம் வேட்பாளருடன் போட்டியிட்டு அவர் தோல்வி அடைந்திருக்கிறார்.தொகுதியில் மேயர் வேட்பாளர் தோல்வியடைந்த நிலையிலும், மாநகர சபையில் ஆட்சியமைக்கப் போவதாகக் கூறுவதற்கு வெட்கமில்லையா அவர்கள் முயற்சித்தாலும் அதற்கான வாய்ப்பு இல்லை. கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தி சிறப்புரிமைகளையோ, பணத்தையோ வழங்கி எவரையும் விலைக்கு வாங்கப் போவதில்லை என்பதைப் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன். உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் மோசமான பழைய முறைமையை எமது அரசாங்கம் ஒரு போதும் பின்பற்றாது.நாம் பெற்ற வெற்றியை பலப்படுத்துவதற்கு ஏனைய உறுப்பினர்கள் விரும்பினால் அவர்களுடன் பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்றத் தயாராக இருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement