யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில், யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையெறி குண்டு ஒன்று இன்று (08) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் கிழக்கு வனப்பகுதியில் உள்ள பனை மரமொன்றின் கீழ் கையெறி குண்டு இருப்பதை அவதானித்த பொதுமக்கள், அது குறித்து மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி பொலிஸார், குண்டு இருக்கும் பகுதியை அடையாளப்படுத்தி, அதன் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
நாகர்கோவில் காட்டில் போர்க்கால கையெறி குண்டு கண்டுபிடிப்பு யாழ்ப்பாணம் வடமராட்சி மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில், யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையெறி குண்டு ஒன்று இன்று (08) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நாகர்கோவில் கிழக்கு வனப்பகுதியில் உள்ள பனை மரமொன்றின் கீழ் கையெறி குண்டு இருப்பதை அவதானித்த பொதுமக்கள், அது குறித்து மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மருதங்கேணி பொலிஸார், குண்டு இருக்கும் பகுதியை அடையாளப்படுத்தி, அதன் பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை பணிக்கு அமர்த்தியுள்ளனர்.