• Dec 11 2024

ஐக்கியத்திற்கு எதிரானவர்களை திருத்த வாக்கிடுங்கள் - சிவசக்தி ஆனந்தன்

Tharmini / Nov 14th 2024, 9:52 am
image

ஐக்கியத்திறகு எதிராக இருப்பவர்களை திருத்துவதற்கு தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினை இன்று (14) பதிவுசெய்திருந்தார்.

அதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தேர்தல்காலங்களில் இளைஞர்களை குறிவைத்து மதுப்போத்தில்களை வழங்கும் செயற்பாடுகளை சிலர் முன்னெடுத்துள்ளனர். 

எனவே எதிர்காலத்தில் தேர்தல் திணைக்களம் தேர்தல் சட்டதிட்டங்களை இறுக்கமாக கடைப்பிடிக்கவேண்டும். 

தமிழ்மக்கள் இந்த தேர்தலில் ஐக்கியப்பட்டிருக்கக் கூடிய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை பலப்படுத்துவதன் ஊடாகவே தமிழ்மக்களின் பிரச்சனைகள் தீர்க்கக்கூடியதாக இருக்கும். 

ஐக்கியத்திறகு எதிராக இருப்பவர்களை திருத்துவதற்கு தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.



ஐக்கியத்திற்கு எதிரானவர்களை திருத்த வாக்கிடுங்கள் - சிவசக்தி ஆனந்தன் ஐக்கியத்திறகு எதிராக இருப்பவர்களை திருத்துவதற்கு தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கினை இன்று (14) பதிவுசெய்திருந்தார்.அதன்பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,தேர்தல்காலங்களில் இளைஞர்களை குறிவைத்து மதுப்போத்தில்களை வழங்கும் செயற்பாடுகளை சிலர் முன்னெடுத்துள்ளனர். எனவே எதிர்காலத்தில் தேர்தல் திணைக்களம் தேர்தல் சட்டதிட்டங்களை இறுக்கமாக கடைப்பிடிக்கவேண்டும். தமிழ்மக்கள் இந்த தேர்தலில் ஐக்கியப்பட்டிருக்கக் கூடிய ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை பலப்படுத்துவதன் ஊடாகவே தமிழ்மக்களின் பிரச்சனைகள் தீர்க்கக்கூடியதாக இருக்கும். ஐக்கியத்திறகு எதிராக இருப்பவர்களை திருத்துவதற்கு தமிழ்மக்கள் இந்த தேர்தலினூடாக சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement