• May 18 2025

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை..!

Sharmi / May 17th 2025, 10:37 pm
image

வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று(17) மாலை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 10க்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பத்திரம் வழங்கப்பட்டது

நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களையடு்த்து வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ரனதுங்க தலைமையில் வவுனியா புகையிரத நிலைய வீதி , குருமன்காடு சந்தி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

குறித்த இரு மணிநேர சோதனை நடவடிக்கையின் போது போக்குவரத்து சட்டங்களை மீறி செயற்பட்ட பத்துக்கு (10) மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பத்திரம் வழங்கப்பட்டது

குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, அதிக சத்தம், வீதி விதிமுறைகளை மீறியமை , தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டப்பத்திரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை. வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று(17) மாலை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 10க்கு மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பத்திரம் வழங்கப்பட்டதுநாட்டின் பல பகுதிகளில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்களையடு்த்து வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ரனதுங்க தலைமையில் வவுனியா புகையிரத நிலைய வீதி , குருமன்காடு சந்தி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுகுறித்த இரு மணிநேர சோதனை நடவடிக்கையின் போது போக்குவரத்து சட்டங்களை மீறி செயற்பட்ட பத்துக்கு (10) மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக தண்டப்பத்திரம் வழங்கப்பட்டதுகுறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, அதிக சத்தம், வீதி விதிமுறைகளை மீறியமை , தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டப்பத்திரம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement