தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் குறித்த வாகனத்தை வழிமறித்து, வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டதுடன், முன்னாள் பணிப்பாளருக்கு சொந்தமான ஆவணங்களின் கோப்பு, அதன்போது திருடப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த வாகனத்தில் வழக்கறிஞர் தினேஷ் தொடங்கொடவும் பயணித்துள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கிதாரிகளின் தாக்குதலில் காயமடைந்த இருவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாரஹேன்பிட்டியில் கார் மீது சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு. தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ உட்பட மூன்று பேரை ஏற்றிச் சென்ற வாகனம் மீது நாரஹேன்பிட்டி பகுதியில் வைத்து சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் குறித்த வாகனத்தை வழிமறித்து, வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டதுடன், முன்னாள் பணிப்பாளருக்கு சொந்தமான ஆவணங்களின் கோப்பு, அதன்போது திருடப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதேவேளை குறித்த வாகனத்தில் வழக்கறிஞர் தினேஷ் தொடங்கொடவும் பயணித்துள்ளார்.இந்நிலையில் துப்பாக்கிதாரிகளின் தாக்குதலில் காயமடைந்த இருவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.