• Apr 30 2026

வவுனியாவில் மே தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து கௌரவிப்போம்: வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு

Ziya / Apr 29th 2026, 2:39 pm
image

எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி அவர்களைக் கௌரவிக்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக வவுனியா வர்த்தகர் சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


"தமது உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, வவுனியா மண்ணின் பொருளாதாரத்தை இயங்க வைக்கும் உன்னத தோழர்களான உழைப்பாளிகளின் தினமே மே 1 ஆகும். இந்தச் சிறப்பான நாளில் எமது வர்த்தக நிலையங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


உழைப்பாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் வவுனியா வர்த்தகர் சங்கம் எப்போதும் முன்னின்று செயற்படுகின்றது. அந்த வகையில், இந்த உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உங்கள் வர்த்தக ஸ்தாபனங்களில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு உரிய ஓய்வினை வழங்கி, அந்நாளில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துமாறு அனைத்து வர்த்தகர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்."இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வர்த்தகர் சங்கத்தின் இந்த முன்னெடுப்பானது வவுனியா பகுதி உழைப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


வவுனியாவில் மே தினத்தில் ஊழியர்களுக்கு விடுமுறை அளித்து கௌரவிப்போம்: வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, வவுனியாவில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கி அவர்களைக் கௌரவிக்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக வவுனியா வர்த்தகர் சங்கம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:"தமது உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, வவுனியா மண்ணின் பொருளாதாரத்தை இயங்க வைக்கும் உன்னத தோழர்களான உழைப்பாளிகளின் தினமே மே 1 ஆகும். இந்தச் சிறப்பான நாளில் எமது வர்த்தக நிலையங்களில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.உழைப்பாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் வவுனியா வர்த்தகர் சங்கம் எப்போதும் முன்னின்று செயற்படுகின்றது. அந்த வகையில், இந்த உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உங்கள் வர்த்தக ஸ்தாபனங்களில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கு உரிய ஓய்வினை வழங்கி, அந்நாளில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துமாறு அனைத்து வர்த்தகர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்."இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வர்த்தகர் சங்கத்தின் இந்த முன்னெடுப்பானது வவுனியா பகுதி உழைப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement