• Apr 14 2026

யாழில் மின்கம்பத்துடன் வேன் மோதி கோர விபத்து

dorin / Apr 13th 2026, 5:48 pm
image

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில், எந்தவிதமான உயிர் சேதங்களும் இன்றி 7 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். 

அம்பன் பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது மதகு ஒன்றுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. 

இதன்போது மதகு பாதுகாப்பு கற்கள் மூன்றினை உடைத்துக்கொண்டு,மின்சார கம்பம் மீது மோதி வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

இதில் பயணித்த 7 பேருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் தெய்வாதீனாமாக உயிர் தப்பியுள்ளனர். 

விபத்து தொடர்பில் மருதங்கேணி பெலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழில் மின்கம்பத்துடன் வேன் மோதி கோர விபத்து யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில், எந்தவிதமான உயிர் சேதங்களும் இன்றி 7 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். அம்பன் பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணித்து கொண்டிருந்த வேன் ஒன்று பிறிதொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது மதகு ஒன்றுடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது மதகு பாதுகாப்பு கற்கள் மூன்றினை உடைத்துக்கொண்டு,மின்சார கம்பம் மீது மோதி வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 7 பேருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் தெய்வாதீனாமாக உயிர் தப்பியுள்ளனர். விபத்து தொடர்பில் மருதங்கேணி பெலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement