வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது நேற்றையதினம் நடைபெற்றது.
ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு அணிநடையுடன் விளையாட்டு போட்டி ஆரம்பமானது. பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுவட்டு நிகழ்ச்சிகள், இடைவேளை நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரைகள் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.
கல்லூரியின் முதல்வர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக வலிகாமம் திருகோணமலை விவசாய அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.விஷ்ணுதாசன் கலந்து சிறப்பித்துடன் ஏனைய விருந்தினர்கள், பிரதி அதிபர், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர் - ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
வட்டு இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது நேற்றையதினம் நடைபெற்றது.ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து, மேற்கத்திய இசை வாத்தியங்கள் முழங்க மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு அணிநடையுடன் விளையாட்டு போட்டி ஆரம்பமானது. பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து சுவட்டு நிகழ்ச்சிகள், இடைவேளை நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரைகள் மற்றும் பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.கல்லூரியின் முதல்வர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் பிரதம விருந்தினராக வலிகாமம் திருகோணமலை விவசாய அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.விஷ்ணுதாசன் கலந்து சிறப்பித்துடன் ஏனைய விருந்தினர்கள், பிரதி அதிபர், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர் - ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.