• Apr 14 2026

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி விளையாட்டு போட்டி!

shanu / Mar 9th 2026, 12:51 pm
image


இந்து மகளிர்  கல்லூரியின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் விளையாட்டு போட்டி நேற்று பிற்பகல் பாடசாலை அதிபர் கிருஷ்ணலதா குலசங்கர் தலைமையில் நேற்று பிற்பகல் 1:39 மணியளவில்  பாடசாலை  மைதானத்தில் இடம்பெற்றது.


இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மேலத்தேய இசை முழங்க வரவேற்கப்பட்டு மங்கல  சுடர்கள் ஏற்றப்பட்டு தேசிய கொடி, பாடசாலை கொடி, இல்ல கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வின் பிரதம விருந்தினர் விளையாட்டு போட்டியை ஆரம்பித்து வைக்க விளையாட்டு போட்டி ஆரம்பமானது.


இதில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கான பரிசில்கள் பதக்கங்கள், சான்றிதழ்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமராட்சி வலய கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர்  மோகனசுந்தரம் தெய்வேந்திரா, கோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்னாள் விரிவுரையாளர் அன்பரசி கருணாகரன், ஆகியோர் வழங்கி வைத்ததுடன் தொடர்ந்து பரிசில்களை வழங்கவென அழைக்கப்பட்ட  மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் ஆசிரியை திருமதி சிவரஞ்சினி தெய்வேந்திரா வழங்கிவைத்தார்.


இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள், என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி விளையாட்டு போட்டி இந்து மகளிர்  கல்லூரியின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் விளையாட்டு போட்டி நேற்று பிற்பகல் பாடசாலை அதிபர் கிருஷ்ணலதா குலசங்கர் தலைமையில் நேற்று பிற்பகல் 1:39 மணியளவில்  பாடசாலை  மைதானத்தில் இடம்பெற்றது.இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு மேலத்தேய இசை முழங்க வரவேற்கப்பட்டு மங்கல  சுடர்கள் ஏற்றப்பட்டு தேசிய கொடி, பாடசாலை கொடி, இல்ல கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வின் பிரதம விருந்தினர் விளையாட்டு போட்டியை ஆரம்பித்து வைக்க விளையாட்டு போட்டி ஆரம்பமானது.இதில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கான பரிசில்கள் பதக்கங்கள், சான்றிதழ்களை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமராட்சி வலய கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர்  மோகனசுந்தரம் தெய்வேந்திரா, கோப்பாய் ஆசிரிய கலாசாலை முன்னாள் விரிவுரையாளர் அன்பரசி கருணாகரன், ஆகியோர் வழங்கி வைத்ததுடன் தொடர்ந்து பரிசில்களை வழங்கவென அழைக்கப்பட்ட  மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் ஆசிரியை திருமதி சிவரஞ்சினி தெய்வேந்திரா வழங்கிவைத்தார்.இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள், என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Advertisement

Advertisement

Advertisement