• May 23 2026

இரு அரச பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து; நால்வர் பலியான பயங்கரம்! 40இற்கும் மேற்பட்டோர் காயம்

Chithra / Mar 18th 2026, 1:02 pm
image


அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.


இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இச்சம்பவத்தில் 40இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்தும்  மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.


இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. 



இரு அரச பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து; நால்வர் பலியான பயங்கரம் 40இற்கும் மேற்பட்டோர் காயம் அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் 40இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்தும்  மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement