• Sep 11 2025

பாராளுமன்ற குழுக்களில் இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

shanuja / Sep 10th 2025, 5:15 pm
image

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் 2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையில், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல முக்கிய அமைச்சுசார் குழுக்களில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.



பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் 2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 



குறித்த பிரேரணைக்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 129 இன் ஏற்பாடுகளின் பிரகாரம், பின்வரிசைக் குழு என்பவற்றில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளாரென சபாநாயகர் தெரிவித்துள்ளார். 


அத்துடன், 2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 125 இன் ஏற்பாடுகளின் பிரகாரம், பொது மனுக்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற குழுக்களில் இரண்டு புதிய உறுப்பினர்கள் நியமனம் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் மற்றும் 2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையில், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல முக்கிய அமைச்சுசார் குழுக்களில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.பாராளுமன்ற நிலையியற் கட்டளை 112 இன் ஏற்பாடுகள் மற்றும் 2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் 2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறித்த பிரேரணைக்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 129 இன் ஏற்பாடுகளின் பிரகாரம், பின்வரிசைக் குழு என்பவற்றில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளாரென சபாநாயகர் தெரிவித்துள்ளார். அத்துடன், 2025 மார்ச் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை 125 இன் ஏற்பாடுகளின் பிரகாரம், பொது மனுக்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement