• May 10 2026

கொழும்பில் இருந்து பயணித்த அதிசொகுசு பேருந்து யாழில் விபத்து - இருவர் படுகாயம்!

Chithra / Dec 18th 2024, 7:45 am
image


யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் அதிநவீன பயணிகள் சொகுசு பஸ்ஸும், சிறிய ரக உழவு இயந்திரமும் (லாண்ட் மாஸ்ரர்) மோதுண்டதில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச் சம்பவம்  இன்று (18) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பஸ்ஸூம், அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும், சொகுசு பஸ்ஸின் நடத்துனருமே படுகாயமடைந்தனர்.

படுகாயம் அடைந்தவர்கள் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சொகுசு பஸ்ஸின் முன் பகுதி முற்றாக சேதமடைந்ததால், சாரதி மற்றும் பஸ்ஸில் இருந்தவர்களை பொதுமக்கள் சேர்ந்து ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் மத்தியில் மீட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கொழும்பில் இருந்து பயணித்த அதிசொகுசு பேருந்து யாழில் விபத்து - இருவர் படுகாயம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் அதிநவீன பயணிகள் சொகுசு பஸ்ஸும், சிறிய ரக உழவு இயந்திரமும் (லாண்ட் மாஸ்ரர்) மோதுண்டதில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம்  இன்று (18) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பஸ்ஸூம், அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய சிறிய ரக உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும், சொகுசு பஸ்ஸின் நடத்துனருமே படுகாயமடைந்தனர்.படுகாயம் அடைந்தவர்கள் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சொகுசு பஸ்ஸின் முன் பகுதி முற்றாக சேதமடைந்ததால், சாரதி மற்றும் பஸ்ஸில் இருந்தவர்களை பொதுமக்கள் சேர்ந்து ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் மத்தியில் மீட்டனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement