வெவ்வேறு பகுதிகளில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மற்றும் கதிர்காமம் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களிலே சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முருங்கன் பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் தாய் மற்றும் சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 04 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் சிக்கி காயமடைந்த காயமடைந்தவர்கள் மன்னாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் என்றும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மற்றுமொரு பகுதியான கோணகங்காரா-கதிர்காமம் சாலையில் முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு ஆண், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்து கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் என்றும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெவ்வேறு பகுதிகளில் லொறி மோதி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு வெவ்வேறு பகுதிகளில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் மற்றும் கதிர்காமம் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களிலே சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். முருங்கன் பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தாய் மற்றும் சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 04 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கி காயமடைந்த காயமடைந்தவர்கள் மன்னாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் என்றும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மற்றுமொரு பகுதியான கோணகங்காரா-கதிர்காமம் சாலையில் முச்சக்கர வண்டி லொறியுடன் மோதியதில் 15 வயது சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு ஆண், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் காயமடைந்து கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் என்றும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.