• Oct 05 2026

காலை நேரத்தில் இரண்டு பேருந்துகள் உரசல் — சில நொடிகளில் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து

Chithra / Oct 5th 2026, 3:52 pm
image


கொழும்பு – காலி வீதியில் இன்று (5) காலை தனியார் பேருந்தொன்று, மெட்ரோ பேருந்தை ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது.


புறக்கோட்டையிலிருந்து காலி முகத்திடல் நோக்கிப் பயணித்த மெட்ரோ பேருந்து, வழக்கமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்த நிலையில், அதே தடத்தில் வேகமாக வந்த தனியார் பேருந்து அதனை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.


இதன்போது இரு பேருந்துகளும் உரசியதில், மெட்ரோ பேருந்தின் சாரதி பக்கத்திலிருந்த பக்கவாட்டு கண்ணாடி பலத்த சேதமடைந்து நொறுங்கியுள்ளது.


காலை நேர கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து, இரு பேருந்துகளின் சாரதிகளும் உடனடியாக வாகனங்களை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


பேருந்தில் பயணித்தவர்கள் சற்று அதிர்ச்சியடைந்த போதிலும், பயணிகள் மற்றும் பேருந்து ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


எனினும், இரு பேருந்துகளும் வீதியின் நடுவே நிறுத்தப்பட்டதால் காலி வீதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கொள்ளுப்பிட்டி போக்குவரத்து பொலிஸார், போக்குவரத்தைச் சீரமைத்து பேருந்துகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்து சாரதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முற்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


பிரதான வீதிகளில் சில தனியார் பேருந்துகள் நேரத்தைப் பின்பற்றுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு வேகமாகவும் ஆபத்தான முறையிலும் பயணிப்பதாக பயணிகளும் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.


இவ்வாறான ஆபத்தான சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலை நேரத்தில் இரண்டு பேருந்துகள் உரசல் — சில நொடிகளில் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து கொழும்பு – காலி வீதியில் இன்று (5) காலை தனியார் பேருந்தொன்று, மெட்ரோ பேருந்தை ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது.புறக்கோட்டையிலிருந்து காலி முகத்திடல் நோக்கிப் பயணித்த மெட்ரோ பேருந்து, வழக்கமான பயணிகளுடன் சென்று கொண்டிருந்த நிலையில், அதே தடத்தில் வேகமாக வந்த தனியார் பேருந்து அதனை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது.இதன்போது இரு பேருந்துகளும் உரசியதில், மெட்ரோ பேருந்தின் சாரதி பக்கத்திலிருந்த பக்கவாட்டு கண்ணாடி பலத்த சேதமடைந்து நொறுங்கியுள்ளது.காலை நேர கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து, இரு பேருந்துகளின் சாரதிகளும் உடனடியாக வாகனங்களை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.பேருந்தில் பயணித்தவர்கள் சற்று அதிர்ச்சியடைந்த போதிலும், பயணிகள் மற்றும் பேருந்து ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.எனினும், இரு பேருந்துகளும் வீதியின் நடுவே நிறுத்தப்பட்டதால் காலி வீதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கொள்ளுப்பிட்டி போக்குவரத்து பொலிஸார், போக்குவரத்தைச் சீரமைத்து பேருந்துகளை அப்புறப்படுத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்து சாரதிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முற்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.பிரதான வீதிகளில் சில தனியார் பேருந்துகள் நேரத்தைப் பின்பற்றுவதற்காக போட்டி போட்டுக்கொண்டு வேகமாகவும் ஆபத்தான முறையிலும் பயணிப்பதாக பயணிகளும் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.இவ்வாறான ஆபத்தான சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement