• Nov 29 2026

யாழில் நள்ளிரவில் துரத்தல் வேட்டை! டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு - தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம்

Chithra / Nov 29th 2026, 4:38 pm
image


யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று, பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது தொலைத்தொடர்பு கம்பங்களை உடைத்துச் சேதப்படுத்திய நிலையில் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் இன்று (27) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை கொடிகாமம் பொலிஸார், கொடிகாமம் நாவலடி ஏ9 வீதியில் வைத்து வழிமறித்துள்ளனர்.


இதன்போது, ஒரு டிப்பர் வாகனம் பொலிஸாரின் சமிக்ஞைக்கு இணங்க நிறுத்திய நிலையில், மற்றைய டிப்பர் வாகனம் நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளது.


இதனையடுத்து, குறித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது, வாகனத்திலிருந்த மணலை வழியெங்கும் கொட்டியவாறு சென்ற குறித்த டிப்பர், சுமார் 10 தொலைத்தொடர்பு கம்பங்களை முழுமையாகச் சேதப்படுத்தியுள்ளது.


இதனைத் தொடர்ந்து, வரணி எருவன் பிள்ளையார் கோவிலடியில் வைத்து  குறித்த டிப்பர் வாகனத்தை நோக்கிப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வாகனத்தை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பில் இரண்டு டிப்பர் வாகனங்களும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் நள்ளிரவில் துரத்தல் வேட்டை டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு - தொலைத்தொடர்பு கம்பங்கள் சேதம் யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று, பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது தொலைத்தொடர்பு கம்பங்களை உடைத்துச் சேதப்படுத்திய நிலையில் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் இன்று (27) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை கொடிகாமம் பொலிஸார், கொடிகாமம் நாவலடி ஏ9 வீதியில் வைத்து வழிமறித்துள்ளனர்.இதன்போது, ஒரு டிப்பர் வாகனம் பொலிஸாரின் சமிக்ஞைக்கு இணங்க நிறுத்திய நிலையில், மற்றைய டிப்பர் வாகனம் நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளது.இதனையடுத்து, குறித்த டிப்பர் வாகனத்தை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது, வாகனத்திலிருந்த மணலை வழியெங்கும் கொட்டியவாறு சென்ற குறித்த டிப்பர், சுமார் 10 தொலைத்தொடர்பு கம்பங்களை முழுமையாகச் சேதப்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து, வரணி எருவன் பிள்ளையார் கோவிலடியில் வைத்து  குறித்த டிப்பர் வாகனத்தை நோக்கிப் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வாகனத்தை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் இரண்டு டிப்பர் வாகனங்களும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement