அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் போர் குறித்து ஆற்றிய உரையைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு, டிரம்ப்பின் "ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்" என்ற எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது.
உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.
கடந்தபெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை.
டிரம்ப் பேச்சால் உலகச் சந்தையில் பதற்றம்;எகிறிய கச்சா எண்ணெய் விலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் போர் குறித்து ஆற்றிய உரையைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு, டிரம்ப்பின் "ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்" என்ற எச்சரிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. கடந்தபெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை.