ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவாகச் சித்தரித்து ஆசிர்வாதம் வழங்குவதாக ஒரு விசித்திரமான புகைப்படத்தைப் truth தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ஈரானின் நாகரிகம் அழிந்துவிடும் என ஈரான் மக்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அரசியல் தலைவர்கள் போரை நிறுத்திவிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று போப் லியோ ட்ரம்பை வலியுறுத்தினார்.
இதற்கு ட்ரம்ப் அவரை எச்சரிக்கும் வகையில், "லியோ நன்றியுடன் இருக்க வேண்டும், ஏனென்றால் அனைவருக்கும் தெரியும், அவர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு அதிர்ச்சிகரமான ஆச்சரியம். அவர் போப் பதவிக்கான எந்தப் பட்டியலிலும் இல்லை, அவர் ஒரு அமெரிக்கர் என்பதாலும், அதிபர் டொனால்ட் ட்ரம்பை சமாளிக்க அதுவே சிறந்த வழி என்று திருச்சபை நினைத்ததாலுமே அவர் அங்கு நியமிக்கப்பட்டார்.
நான் வெள்ளை மாளிகையில் இல்லை என்றால், லியோ வத்திகானில் இருந்திருக்க மாட்டார். போப் லியோ குற்றச்செயல்களைக் கையாள்வதிலும், அணு ஆயுத விவகாரங்களிலும் பலவீனமாக இருக்கிறார். இது எனக்குப் பிடிக்கவில்லை. போப் லியோ, போப்பாக தனது செயல்பாடுகளைச் சீரமைக்க வேண்டும், பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும், தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதை நிறுத்த வேண்டும்.
அவர் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு சிறந்த போப்பாகச் செயல்பட வேண்டும். இது அவருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதைவிட முக்கியமாக, இது கத்தோலிக்க திருச்சபையைப் பாதிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். “தனக்கு போப்பின் மீது பெரிய ஈடுபாடு இல்லை” என்றும் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவாகச் சித்தரித்து ஆசிர்வாதம் வழங்குவதாக ஒரு விசித்திரமான புகைப்படத்தைப் truth தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகியதுடன் ட்ரம்பை முற்றிலும் பைத்தியம் பிடித்துவிட்டது, மதிப்பளிக்க தெரியாதவர் என்றும் பலர் தமது விமர்சனக் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சர்ச்சை படத்தை பகிர்ந்து கிறீஸ்தவர்களை சீண்டிய ட்ரம்ப்; பாப்பரசரையும் கடுமையாக விமர்சிப்பு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவாகச் சித்தரித்து ஆசிர்வாதம் வழங்குவதாக ஒரு விசித்திரமான புகைப்படத்தைப் truth தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. ஈரானின் நாகரிகம் அழிந்துவிடும் என ஈரான் மக்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் அரசியல் தலைவர்கள் போரை நிறுத்திவிட்டு அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று போப் லியோ ட்ரம்பை வலியுறுத்தினார்.இதற்கு ட்ரம்ப் அவரை எச்சரிக்கும் வகையில், "லியோ நன்றியுடன் இருக்க வேண்டும், ஏனென்றால் அனைவருக்கும் தெரியும், அவர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு அதிர்ச்சிகரமான ஆச்சரியம். அவர் போப் பதவிக்கான எந்தப் பட்டியலிலும் இல்லை, அவர் ஒரு அமெரிக்கர் என்பதாலும், அதிபர் டொனால்ட் ட்ரம்பை சமாளிக்க அதுவே சிறந்த வழி என்று திருச்சபை நினைத்ததாலுமே அவர் அங்கு நியமிக்கப்பட்டார்.நான் வெள்ளை மாளிகையில் இல்லை என்றால், லியோ வத்திகானில் இருந்திருக்க மாட்டார். போப் லியோ குற்றச்செயல்களைக் கையாள்வதிலும், அணு ஆயுத விவகாரங்களிலும் பலவீனமாக இருக்கிறார். இது எனக்குப் பிடிக்கவில்லை. போப் லியோ, போப்பாக தனது செயல்பாடுகளைச் சீரமைக்க வேண்டும், பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும், தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதை நிறுத்த வேண்டும். அவர் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு சிறந்த போப்பாகச் செயல்பட வேண்டும். இது அவருக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதைவிட முக்கியமாக, இது கத்தோலிக்க திருச்சபையைப் பாதிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். “தனக்கு போப்பின் மீது பெரிய ஈடுபாடு இல்லை” என்றும் தெரிவித்தார்.இவ்வாறான நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவாகச் சித்தரித்து ஆசிர்வாதம் வழங்குவதாக ஒரு விசித்திரமான புகைப்படத்தைப் truth தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாகியதுடன் ட்ரம்பை முற்றிலும் பைத்தியம் பிடித்துவிட்டது, மதிப்பளிக்க தெரியாதவர் என்றும் பலர் தமது விமர்சனக் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.