• Apr 16 2026

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் - கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளுக்கு பிணை!

shanu / Feb 11th 2026, 4:08 pm
image

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திருகோணமலையைச் சேர்ந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ உள்ளிட்ட நான்கு பிக்குகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 


சந்தேக நபர்கள் சமர்ப்பித்த பிணை விண்ணப்பம் இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் இன்று பிணை உத்தரவை வழங்கினார்.


கடந்த 16.11.2025 அன்று திருகோணமலை பிரெட்ரிக் கோட்டை வீதியில் கடற்கரை ஓரமாக உள்ள ஸ்ரீசம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரைக்கு சொந்தமானதென குறிப்பிடப்படும் பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி இடம்பெற்ற கட்டுமான வேலைகள் தொடர்பாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.


​இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கோரியிருந்தனர். 


எனினும், இதனை மீறி அன்று இரவு சிலரால்  புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்தே கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் - கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளுக்கு பிணை திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திருகோணமலையைச் சேர்ந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ உள்ளிட்ட நான்கு பிக்குகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் சமர்ப்பித்த பிணை விண்ணப்பம் இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் இன்று பிணை உத்தரவை வழங்கினார்.கடந்த 16.11.2025 அன்று திருகோணமலை பிரெட்ரிக் கோட்டை வீதியில் கடற்கரை ஓரமாக உள்ள ஸ்ரீசம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரைக்கு சொந்தமானதென குறிப்பிடப்படும் பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி இடம்பெற்ற கட்டுமான வேலைகள் தொடர்பாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.​இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கோரியிருந்தனர். எனினும், இதனை மீறி அன்று இரவு சிலரால்  புத்தர் சிலையை அகற்ற முயற்சித்த போது, பிக்குகள் மற்றும் பிரதேச மக்களிடமிருந்து பொலிஸாருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்தே கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement