• Feb 27 2026

மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சிறிதரன் எம்.பி. அஞ்சலி

Chithra / Feb 26th 2026, 11:54 am
image


இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நல்லகண்ணு (வயது 101) உடல்நலக்குறைவால் நேற்று புதன்கிழமை (25) காலமானார். 

சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழகத்துக்குச் சென்று, நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், 

“இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றியதுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த பெருந்தகை நல்லக்கண்ணு ஐயாவிற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன்.

எளிமை, நேர்மை, சமூக நீதி, சமத்துவம் ஆகிய உயரிய மதிப்புகளின் உருவாக வாழ்ந்த அவர், தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டும் ஒளியாக நிலைத்திருப்பார். 

அவரது மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” என்று பதிவிட்டுள்ளார்.


மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சிறிதரன் எம்.பி. அஞ்சலி இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.நல்லகண்ணு (வயது 101) உடல்நலக்குறைவால் நேற்று புதன்கிழமை (25) காலமானார். சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழகத்துக்குச் சென்று, நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், “இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றியதுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த பெருந்தகை நல்லக்கண்ணு ஐயாவிற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன்.எளிமை, நேர்மை, சமூக நீதி, சமத்துவம் ஆகிய உயரிய மதிப்புகளின் உருவாக வாழ்ந்த அவர், தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டும் ஒளியாக நிலைத்திருப்பார். அவரது மறைவு அரசியல் உலகிற்கும், சமூக நீதிக்காக போராடும் மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement