• May 18 2025

வவுனியாவில் மின்வயரின் மீது முறிந்து வீழ்ந்த மரம்! - மின்சார சபை அசண்டையீனம்!

Thansita / May 17th 2025, 11:34 am
image

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் மின்சார வயரின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்து பலமணி நேரமாகியும் அதனை அகற்றுவதில் மின்சார சபை அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியாவில் இன்று காலை முதல் கடும்காற்றுடன் கூடிய மழை பெய்தது.

இந்த நிலையில் பூந்தோட்டம் சந்தியில் வீதிக்கரையில் நின்ற தென்னைமரம் முறிந்து மின்சார வயரின் மீது வீழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இது தொடர்பாக மின்சார சபைக்கும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும் பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் மரம் முறிந்து நான்கு மணி நேரம் கடக்கின்ற நிலையிலும் அது இன்னமும் அகற்றப்படவில்லை.

குறித்த மரம் பாதையின் நடுவில் ஆபத்தான முறையில் காணப்படுகின்றது. 

பொதுமக்கள் அதனூடாகவே பயணம்  செய்துவருகின்ற நிலையினை காணமுடிகின்றது

வவுனியாவில் மின்வயரின் மீது முறிந்து வீழ்ந்த மரம் - மின்சார சபை அசண்டையீனம் வவுனியா பூந்தோட்டம் சந்தியில் மின்சார வயரின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்து பலமணி நேரமாகியும் அதனை அகற்றுவதில் மின்சார சபை அசண்டையீனமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.வவுனியாவில் இன்று காலை முதல் கடும்காற்றுடன் கூடிய மழை பெய்தது.இந்த நிலையில் பூந்தோட்டம் சந்தியில் வீதிக்கரையில் நின்ற தென்னைமரம் முறிந்து மின்சார வயரின் மீது வீழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இது தொடர்பாக மின்சார சபைக்கும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும் பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டிருந்தது. எனினும் மரம் முறிந்து நான்கு மணி நேரம் கடக்கின்ற நிலையிலும் அது இன்னமும் அகற்றப்படவில்லை.குறித்த மரம் பாதையின் நடுவில் ஆபத்தான முறையில் காணப்படுகின்றது. பொதுமக்கள் அதனூடாகவே பயணம்  செய்துவருகின்ற நிலையினை காணமுடிகின்றது

Advertisement

Advertisement

Advertisement