அஞ்சல் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என்று அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
19 கோரிக்கைகளை முன்வைத்து, அஞ்சல் தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் இ.ஜி.சி.நிரோஷன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கலந்துரையாடலுக்குப் பின்னர், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவர தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு;19 கோரிக்கைகளுடன் இன்றும் தொடரும் அஞ்சல் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என்று அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 19 கோரிக்கைகளை முன்வைத்து, அஞ்சல் தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் இ.ஜி.சி.நிரோஷன் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த கலந்துரையாடலுக்குப் பின்னர், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவர தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.